உலகம்

வங்கதேச கிரிக்கெட் வீரர் உள்பட 8 பேர் மீது சூதாட்ட புகார்.. 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் நடந்த முறைகேடு அம்பலம்

வங்காளதேச கிரிக்கெட் வீரர் உள்பட 8 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம் சுமத்தியுள்ளது. 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

00 Comments

Leave a comment