Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணி உருவாக்கம்
14 வெளிநாடுகள் உடன் இணைந்து செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. உலகின் 12 சதவிகித வணிகப் போக்குவரத்து நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணையை ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிக்கள் கட்டுப்படுத்தி வருவதால், அவ்வழியாகச் செல்ல முயலும் சவுதி கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாப் அல்-மண்டாப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக செங்கடல் பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க சவுதி அரசு கடந்த ஜூலை 30 அன்று முன்மொழிந்தது.
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி 5 ஆண்டுகள் நிறைவு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி காபூலில் வெற்றி அணிவகுப்பு நடத்தப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் உறுதியாக தக்கவைத்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

பொருளாதார நெருக்கடி, வறட்சி, நிலநடுக்கம் மற்றும் மனிதாபிமான உதவி பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகளுடன் தாலிபான்களின் தொடர்பு அதிகரித்தாலும், ரஷ்யா மட்டுமே அவர்களின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved