news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

’வண்டிய சீக்கிரமா எடுங்க,’ வார்த்தையை விட்ட பெண், விபரீதம்

இளைஞர் சரமாரி தாக்குதல்

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தருமபுரி மாவட்டம், அனுமந்தீர்த்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், வண்டியை எடுத்துக் கொண்டு ஓரமாக செல்ல கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பான நிலையில், பெண் மீது இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கினார். தாக்குதல் நடத்திய தாத்தாவையும் பேரனையும் கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பணம் செலுத்தும் போது...
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அனுமந்தீர்த்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு, அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது அவர் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்காக ஸ்கூட்டியை எடுக்காமல் நின்றிருந்த பெண்ணை, அங்கு பெட்ரோல் நிரப்புவதற்கு பைக்கில் காத்திருந்த தாத்தாவும் பேரனும் ஓரமாக செல்லக் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு பணம் செலுத்த வேண்டும், சற்று பொறுங்கள் என பெண் கூறவே இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.

கடுமையான மல்லுக்கட்டு...
அப்போது, முதியவர் கருங்கண்ணனை அப்பெண் மரியாதைக் குறைவாக பேசியதாகவும், ’மெண்டல்’ என திட்டியதாகவும் கூறப்படும் நிலையில் அதனை கேட்டு ஆத்திரமடைந்த பேரன் அவினேஷ்வரன் அடிக்க பாய்ந்து உள்ளார். அப்பெண்ணை இளைஞர் தள்ளவே, செருப்பைக் கழட்டி அப்பெண் அடித்திருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர், பெண்ணின் முகத்தில் பளார் பளார் என அறைந்திருக்கிறார்.

சாலை மறியல் போராட்டம்
இதனை பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தடுத்து நிறுத்தவே, மற்றுமொரு செருப்பைக் கழட்டிக் கொண்டு அப்பெண் தாக்கியதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர், அப்பெண்ணின் முடியை இழுத்து பிடித்து சரமாரியாக தாக்கினார். அதோடு முகத்திலும் எட்டி உதைத்தார்.

இந்நிலையில், எஸ்.பட்டியை சேர்ந்த கருங்கண்ணன் மற்றும் அவரது பேரன் அவினேஷ்வரனை கைது செய்ய வலியுறுத்தி அப்பெண்ணின் உறவினர்கள் அரூர் - ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதாக காவல்துறை கூறியதை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Related Link
மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை, கம்பி நீட்டிய காதல் ஜோடி அதிரடி கைது

மருத்துவ தம்பதி வீட்டில் கைவரிசை, கம்பி நீட்டிய காதல் ஜோடி அதிரடி கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சவுதி அரேபியாவில் மற்றொரு விமான நிலையம் மீது தாக்குதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved