Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு :
நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள "தி இந்தியா ஸ்டோரி" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் தல்படே ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது போலவும், பின்னணியில் மும்பை உயர் நீதிமன்றம் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேட்டன் டிகே இயக்கத்தில், எம்.ஐ.ஜி. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்திற்கு சாகர் பி. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் 24-ம் தேதி வெளியாகிறது.
திரைப்படத்துக்கு "ஏ" சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் :

முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "பகவதி" படத்துக்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 24 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சென்சார் சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.