news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சிவசேனா நிர்வாகியால் தாக்கப்பட்ட மருத்துவர் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

சிவசேனா நிர்வாகியால் தாக்கப்பட்ட மருத்துவர் ராஜினாமா

தானே - மகாராஷ்டிரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மருத்துவர் ராஜினாமா

இனி வேலைக்கே வரமாட்டேன் என திட்டவட்டம் :

மகாராஷ்டிராவில் சிவசேனா நிர்வாகியால் தாக்கப்பட்ட 2 மருத்துவர்களில் ஒருவர் வேலையே வேண்டாம் எனக் கூறி நகரை விட்டு வெளியேறி விட்டார். தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வந்த சிருஷ்டி பவிஸ்கார், வைபவ் சலுங்கே ஆகியோர், சிவசேனா நிர்வாகி உள்ளிட்டோரால் தாக்கப்பட்டனர். இதில் டாக்டர் சலுங்கே வேலையை விட்டு சென்று விட்டார்.

பாஜகவில் இணைந்த TMC முன்னாள் எம்.பி.க்கள் 3 பேர் :

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 3 முன்னாள் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஸ்மிதா தேவ், சுகேந்து சேகர் ரே, பிரகாஷ் சிக் பராய்க் ஆகியோர் எம்பி பதவியை ராஜினாமா செய்ததோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினர். 3 பேரும் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

ஜீப் மீது லாரி மோதி நண்பர்கள் 7 பேர் பரிதாப பலி :

கர்நாடகாவில் ஜீப் மீது லாரி மோதியதில் நண்பர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தார்வாடை சேர்ந்த 9 பேர் ஆன்மிக தலங்களுக்கு ஜீப்பில் சுற்றுலா சென்றபோது, உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா தாலுகாவின் அரபைல்காட்டின் வளைவில் எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. இவர்கள் தார்வாடில் உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் டெலிவரி பாய்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 3 முக்கிய சிலைகள் :

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 3 முக்கிய சிலைகளை இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா மீண்டும் ஒப்படைக்க உள்ளது. தமிழகத்தில் இருந்து மிகவும் பழைமை வாய்ந்த திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிலை, நந்தி சிலை மற்றும் கார்த்திகேயன் சிலை ஆகியவை கடத்தி செல்லப்பட்டன. இவற்றை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முன்வந்துள்ளது.

Related Link
அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் புறப்பட்டார் CM விஜய் - On The Way-ல் செய்த செய்கை தான் அல்டிமேட்

6
42 mins agoshare
CM Karurbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau