news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் மீது அசுர பலத்துடன் தாக்குதல் நடத்துவோம்
tv

Also Watch

tv

Read this

ஈரான் மீது அசுர பலத்துடன் தாக்குதல் நடத்துவோம்

இஸ்ரேல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை :

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாகவும், முன்பைவிட அதிக பலத்துடன் தாக்குதல் நடத்தப்படும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ராணுவ விழாவில் பேசிய அவர், போரை மீண்டும் தொடங்குவதற்கான முழு தயார் நிலையுடன் தங்களது ராணுவம் உள்ளதாகவும், வான்வழி தாக்குதல்கள் மூலம் ஈரானில் உள்ள அச்சுறுத்தல்களை முற்றிலுமாக அழிக்க ராணுவம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேவைப்பட்டால் 3-வது முறையாகவும் தாக்குதல் நடத்தப்படும் என்றார்.

அமெரிக்க தாக்குதல்களில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு :

கடந்த 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 14 பேர் பலியானதாகவும், 78 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

ஈரானின் முக்கிய ரயில் பாலத்தை தகர்த்த அமெரிக்கா :

ரஷ்யா மற்றும் சீனாவை ஈரானுடன் இணைக்கும் முக்கிய ரயில் பாதையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

மேலும், ஈரான் மீது கடந்த 2 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், ஈரானின் வடக்கு மாகாணமான கோலெஸ்தானில் உள்ள ஆக்டே கான் ரயில் பாலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ரயில்வே பாலம், சீனா மற்றும் துர்க்மெனிஸ்தான் உடனான ஈரானின் வழித்தடங்களில் முக்கிய பாதையாக கருதப்படுகிறது.

Related Link
சேதமடைந்த கமேனியின் இல்லத்தின் வீடியோ வெளியீடு

சேதமடைந்த கமேனியின் இல்லத்தின் வீடியோ வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் புறப்பட்டார் CM விஜய் - On The Way-ல் செய்த செய்கை தான் அல்டிமேட்

6
44 mins agoshare
CM Karurbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau