Also Watch
Read this
கிராமத்து மண்ணின் வாசனையையும், மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் காட்டிய 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முழு அரசு மரியாதை வழங்கப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பாரதிராஜாவின் நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்று, இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது கலைச் சேவையை மதிக்கும் வகையில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

"திரையுலகின் பாதையை மாற்றியமைத்த புதுப்போக்காளர்"
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்த புதுப்போக்காளர் என, மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

வைகோ, சீமான் மரியாதை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி தனது இரங்கலை தெரிவித்தார். பாரதிராஜாவின் பட்டறையில் பயிற்சி பெற்று, பின்னாளில் இயக்குநராகவும் நடிகராகவும் உருவெடுத்தவர்களில் ஒருவரனான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது ஆசானின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜா உடலுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நயினார் நாகேந்திரன், வன்னியரசு அஞ்சலி
பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், என் இனிய கிராமத்து மக்களே என பாரதிராஜா கூறுவது மிக அழகாக இருக்கும் என்றார். மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு அமைச்சர் வன்னியரசு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

வீரமணி, ஜெயகுமார் புகழாரம்
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் இழப்பு என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்தார்.
சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை போன்றவற்றை அழிக்கக்கூடிய கருத்துள்ள திரையை, திரை உலகத்தை நல்ல கலாச்சாலையாக , பல்கலைக்கழகமாக மாற்றியவர் பாரதிராஜா என்று, திராவிடர் கழகத்தலைவர் வீரமணி புகழாரம் சூட்டினார்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved