news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒரு கிராமுக்கு ரூ.300 விலை சரிந்த ஆபரணத் தங்கம்
tv

Also Watch

tv

Read this

ஒரு கிராமுக்கு ரூ.300 விலை சரிந்த ஆபரணத் தங்கம்

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இரண்டாவது நாளாக அதிரடியாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிந்தது. ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 06
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்க 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 08
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 09
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 10
ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 11
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 06 - ரூ.1,13,600
ஜூன் 07 - ரூ.1,13,600
ஜூன் 08 - ரூ.1,12,560
ஜூன் 09 - ரூ.1,13,600
ஜூன் 10 - ரூ.1,10,400
ஜூன் 11 - ரூ.1,08,000 இன்று


Related Link
இன்றைய ராசி பலன்கள் 11062026

இன்றைய ராசி பலன்கள் 11062026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரண்டு வந்த திரை பிரபலங்கள், படைப்புகளால் வாழும் பாரதிராஜா

4
10 mins agoshare
உடைந்து அழுத முதல் மரியாதை குயிலுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved