news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இயக்குநர் பாரதிராஜா பூத உடல் இன்று நல்லடக்கம்
tv

Also Watch

tv

Read this

இயக்குநர் பாரதிராஜா பூத உடல் இன்று நல்லடக்கம்

இறுதி சடங்கு தேனியில்...

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதி சடங்கு இன்று தேனியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் இமயம்...

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலேயே நேற்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், கொடைக்கானல் பிரிவு சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் மரியாதை
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மரணச் செய்தி அறிந்ததும் விரைந்து சென்ற விஜய், பாரதிராஜா உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். மேலும், அருகில் உடைந்து போய் அமர்ந்திருந்த ராதிகாவின் கைகளை பற்றிக் கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார்.

பாரதிராஜாவுக்கு இபிஎஸ் புகழாரம்
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர் பாரதிராஜா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் என்றும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் மரியாதை

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திரையுலகை சேர்ந்த ஆளுமைகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, அர்ஜூன், பிரபு உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதோடு, அவருடன் திரைக்கல்வி பயின்ற இயக்குநர்கள் கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.

இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து
இயக்குநர் பாரதிராஜா மறைவையொட்டி இன்று அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Link
'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு

'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரண்டு வந்த திரை பிரபலங்கள், படைப்புகளால் வாழும் பாரதிராஜா

4
8 mins agoshare
உடைந்து அழுத முதல் மரியாதை குயிலுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved