news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

'முதல் மரியாதை'க்கு முழு 'அரசு மரியாதை' - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் சமூகத்துக்கு திரை வழி பங்களிப்பு

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மறைந்த திரைப் பேராளுமை இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படும் என்று, தமிழ் சமூகத்துக்கு திரை வழி செய்த பங்களிப்பை நினைவு கூர்ந்து, முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார்.

மனவேதனையும் துயரமும்
இதுகுறித்து, தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.

இளைப்பாற பிரார்த்திக்கிறேன்
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை
திரைத்துறையில், பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

Related Link
🔴LIVE: இயக்குநர் பாரதிராஜா காலமானார் | DIrector BharathiRaja Passed Away | Bharathiraja

🔴LIVE: இயக்குநர் பாரதிராஜா காலமானார் | DIrector BharathiRaja Passed Away | Bharathiraja

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
4 hrs 36 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau