news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மிக நீண்ட காலம் பிரதமர்: புதிய சாதனை படைக்கும் மோடி
tv

Also Watch

tv

Read this

மிக நீண்ட காலம் பிரதமர்: புதிய சாதனை படைக்கும் மோடி

மோடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மோடி

நேருவின் சாதனையை இன்று முறியடிக்கும் பிரதமர் மோடி :

இந்தியாவில் தேர்தெடுக்கப்பட்ட பிரதமராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்கிற புதிய சாதனையை பிரதமர் மோடி இன்று படைக்கவுள்ளார். மறைந்த பிரதமர் நேரு 1952 மே 13 முதல் 1964 மே 27 வரை 4 ஆயிரத்து 398 நாட்கள் பிரதமராக இருந்தார். பிரதமர் மோடி, 2014 மே 26-ல் பதவியேற்று, நேற்றுடன் 4 ஆயிரத்து 398 நாட்களை நிறைவு செய்த நிலையில், இன்று 4 ஆயிரத்து 399-வது நாளை நிறைவு செய்கிறார்.

பிரான்ஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார் :

பிரதமர் மோடி ஒருவார கால அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியாவுக்கு செல்கிறார். அப்போது, பிரான்ஸில் வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

13, 14-ம் தேதிகளில் நைஸ் நகருக்கு செல்லும் அவர் அதிபர் மேக்ரானை சந்தித்து பேசுகிறார். பின்னர், 14 மற்றும்15-ம் தேதிகளில் ஸ்லோவாக்கியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

குவைத் மன்னருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் :

மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமர் மோடி, குவைத் மன்னர் ஷேக் மிஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபா உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, மேற்காசிய பிராந்தியில் நிலவும் பதற்றம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த அவர், குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய கண்ணியம் ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கான கண்டனத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்புமனு நிராகரிப்பு :

மாநிலங்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது. தெலங்கானாவில் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த விவரங்களை அவர் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனவும் பாஜக வேட்பாளர் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனை :

போலி கையெழுத்து குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் போலியாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடந்த சோதனையில், பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Link
ரீல்ஸ் மோகத்தால் தங்க நகைகளை பறிகொடுத்த பெண்

ரீல்ஸ் மோகத்தால் தங்க நகைகளை பறிகொடுத்த பெண்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
1 hr 36 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved