நாமக்கல் அருகே கூலிப் பிரச்னையில் 2 வடமாநில தொழிலாளர்களை கொலை செய்த 4 பேரை 10 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர். பலநாயக்கன் பாளையத்தில் கரும்பு வெட்ட கூலித் தொழிலாளியாக அழைத்து வரப்பட்ட கிரண் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரை கொலை செய்ததாக ஏஜென்ட் மாருதி டோம்பே, அவரது உதவியாளர் உத்தவ், முன்னாள் கரும்பு ஆய்வாளர் பட்லூர் விஜய், இறையமங்கலம் தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.