சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேங்காய் லோடு ஏற்றி சென்ற லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எடப்பாடி அடுத்த சந்தன மில் பகுதியை சேர்ந்த கோபால் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : அற்புத குழந்தை இயேசு ஆலய தேர்பவனி விழா