news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டுப்பாட்டை இழந்து பிரியாணி கடையில் புகுந்த சுற்றுலா வேன்
tv

Also Watch

tv

Read this

கட்டுப்பாட்டை இழந்து பிரியாணி கடையில் புகுந்த சுற்றுலா வேன்

ஆதியூர், திருப்பத்தூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுற்றுலா வேன்

வேலூர்  மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரஞ்சித் குமார் (23) என்பவர் டூரிஸ்ட் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது டூரிஸ்ட் வேன் திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் ரஞ்சித்குமார் தூக்க கலக்கத்தில் அருகே இருந்த
பர்னிச்சர் கடை மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் டூரிஸ்ட் வேன் பிரியாணி கடையின் உள்ளே புகுந்து மோதியதில் வேனில் பயணம் செய்த 13 பேரில் 5 ஐந்து பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் காயம் பட்ட 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பர்னிச்சர் கடையின் வெளிப்புற பகுதியில் வைத்திருந்த சோபா செட் மற்றும் மின்கம்பம் அடியோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
ஆனைமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

ஆனைமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவில் டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பாஸ்போர்ட்

0
8 mins agoshare
அமெரிக்கா புதிய பாஸ்போர்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau