Also Watch
Read this
By: Manigandan Raja

ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ள நிலையில் பொதுமக்களிடம் இருந்து சேகரித்து வரும் குப்பைகளை மக்கள் சக்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடக்கில் இருந்து தீ பற்றி எரிந்து மலமலவனபரவி பல நூறு அடி உயரத்துக்கு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் தற்பொழுது இந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது மேலும் தீ அதிகமாக பரவி உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திணறி வருகின்றனர்.