news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரண்டு லாரிகளுக்கு இடையே பைக் சிக்கி விபத்து
tv

Also Watch

tv

Read this

இரண்டு லாரிகளுக்கு இடையே பைக் சிக்கி விபத்து

பேரணாம்பட்டு, வேலூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பைக் சிக்கி விபத்து

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமிழ்நாடு–ஆந்திரா எல்லைக்குட்பட்ட பத்தலபல்லி மலைப்பாதையில் ஒரிசாவில் இருந்து மாட்டு தோல்களை ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டை
நோக்கி கனரக வாகனம் வந்து கொண்டிருந்தது அதே வழியாக பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த அனுஷ்கா அவரது அண்ணன் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருக்கும் போது அவர்கள் பின்னாடி அதிவேகமாக வந்த லாரி இருவர் மீதும் பலமாக மோதியதில் லாரி சக்கரத்திற்குள் அண்ணன் தங்கை இருவரும் சிக்கி உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழக மற்றும் ஆந்திரா போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலத்திற்கு சொந்தமான இடத்தில் விபத்து ஏற்பட்டதால் வி. கோட்டா போலீசார் இருவரின் உடலை மீட்டு பலமனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் விபத்து குறித்து வி. கோட்டா போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர் பத்தலப்பல்லி தமிழக ஆந்திர மலைப்பகுதியில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
ஆக்ரோஷமாக சண்டையிட்ட இரண்டு காட்டு யானைகள்

ஆக்ரோஷமாக சண்டையிட்ட இரண்டு காட்டு யானைகள்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாற்றுத் திறனாளிகளுக்கான ஹெலன் கேலர் விருது

0
26 mins agoshare
ஹெலன் கேலர் விருது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau