Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டத்தில் துறை சார்ந்த ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று இரவு வருகை தந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று காலை திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் இயந்திரங்கள் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பலவற்றில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அதிகாரிகளையும் கடிந்து கொண்டார்.
குறிப்பாக இந்த நவீன அரிசி ஆலையில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் ஆனால் அரசு கட்டிடங்களின் சுவர்களும் அரசு துறைகளும் அழுக்கு படித்துதான் இருக்குமல்லவா என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இயந்திரம் இயங்கினால் தான் வேலை கொடுக்க முடியும் அதற்காக இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.இல்லை என்றால் இழுத்து மூடி விட்டு வேலையில்லாமல் வீட்டில் உட்கார வேண்டியதுதான் என அதிகாரிகளிடம் அவர் கடிந்து கொண்டார்.
அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை செய்யாமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் வெங்கட்ரமணனுடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.