Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு காவல் நிலையம் அருகே இருபதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் கால்நடைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக கால்நடைகளின் கழிவுகள் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் தட்டு ஏற்படுவதாகவும் ஆடு மாடு போன்றவை பொதுமக்களை முட்டி தள்ளுவதாகவும் புகார்கள் இருந்தன. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கால்நடை பண்ணை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரிடம் சமாதானம் பேசினர். அப்போதும் கலைந்து செல்லாததால் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு ஆவடி எம்எல்ஏ ரமேஷ் குமார் சென்று
பொதுமக்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கால்நடை வளர்ப்பிற்கு வரைமுறை கொண்டு வருவதாகவும் நகராட்சி மற்றும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனிடையே எம்எல்ஏ சென்ற சிறிது நேரத்தில் அங்கு இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.