Also Watch
Read this
Posted on: Feb 26, 2026 09:58 AM
By: Fyrose Banu

வந்தவாசி அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 75 ஆவது ஆண்டு பவள விழா - 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு கட்டி கொடுத்தனர்.
ரூ. 25 லட்சம் மதிப்பிலான சீர்
தேசூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75ஆம் ஆண்டு பவள விழாவில் முன்னாள் மாணவர்கள் 25 லட்சம் ரூபாய்க்கு மேலான பணிகளை இணைந்து பள்ளிக்கு செய்தனர்.
வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 75வது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பள்ளிக்கு ஒப்படைத்த முன்னாள் மாணவர்கள்
இதனை கொண்டாடும் வகையில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்ட அரங்கம், காந்தியடிகள் சிலை, பிரமாண்டமான நுழைவாயில், கலையரங்கம், பள்ளி மாணவர்களுக்கு கழிவறைகள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னெடுத்து கட்டி அமைத்து, ஆரணி எம்.பி. தரணிவேந்தன், வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் ஆகியோர் இணைந்து பள்ளிக்கு ஒப்படைத்தனர்.