news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து

மேலூர், மதுரை

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu bus accident

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து வந்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், பள்ளப்பட்டி புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டீ கடையில் டி அருந்துவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் ( 23), மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பெண் பயணி உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு வருவதுடன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
பிரியாணி கடையில் இருந்து காலாவதியான இறைச்சி பறிமுதல்

பிரியாணி கடையில் இருந்து காலாவதியான இறைச்சி பறிமுதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு

0
23 mins agoshare
மாவட்ட செயலாளருக்கு மண்டை உடைப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved