news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பெண்ணின் உடல்
tv

Also Watch

tv

Read this

ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பெண்ணின் உடல்

அரியலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெண்ணின் உடல்

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை பெண் ஒருவரது உடல் கிடப்பதாக கிடைத்த தகவலைடுத்து, அரியலூர் நகர காவல்துறையினர் மற்றும் இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ஆகியோர் சென்று பார்த்தனர்.

அப்போது சுமார் 30 முதல் 35 வரை மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரது உடல், தண்டவாளத்திற்கு அருகே தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் கிடந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தால், அவரது உடலில் நிச்சயம் துணி இருந்திருக்கும். தண்டவாளத்தில் நடந்து செல்லும் போது ரயில் மோதி விபத்து நடந்திருந்தால் கூட, விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள 500 மீட்டர் தொலைவில் ரத்தமோ அல்லது அவரது துணிகளோ கிழிந்த நிலையில் கிடந்திருக்கும்.


ஆனால் கைப்பற்றப்பட்டுள்ள இந்த பெண்ணின் உடலில் துணிகள் எதுவும் இல்லாதது, காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய இருப்புப் பாதை காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த பெண் யார்? அவர் எப்படி இங்கு வந்தார்? இது விபத்தால் நடந்த மரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கின்ற ரீதியில், அரியலூர் காவல் துறையினர் மற்றும் விருத்தாசலம் இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு விவரங்களை அளிக்க வேண்டுகோள்

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு விவரங்களை அளிக்க வேண்டுகோள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

0
57 mins agoshare
சனீஸ்வர பகவான் கோயில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau