Also Watch
Read this
By: Manigandan Raja

ஆவடி தொகுதியில் 200 பேருக்கு புதிய ரேஷன் அட்டை வழங்குதல்,மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்,1கோடி மதிப்பீட்டில் AVNL பங்களிப்புடன் ஏரி புனரமைப்பு பணி துவக்க விழா என பல்வேறு நலத்திட்டங்கள் துவக்க விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஐடி துறை அமைச்சருமான குமார் கலந்து கொண்டு சேவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளையும் அவர் துவங்கி வைத்து விளக்கம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பேசியவர் இந்த திட்டம் மிக சிறப்பான திட்டம்,மக்களின்
நலனுக்காக கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.
இதன் மூலம் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.எனவே மக்கள் தாங்களாக முன்வந்து இணையத்தில் தகவல்களை வழங்க வேண்டும் என அரசு சார்பாகவும்,முதல்வர் விஜய்
சார்பாகவும்,என்னுடைய சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் அனைவரும் தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தனியார் மருத்துவமனைகளை விட மாற்றுத்திறனாளிகளுக்கு இங்கு சேவை மையம் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை நேரில் கண்டு
வியந்து போனேன். மென் மேலும் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆவடி மருத்துவமனையில் பிணவறை செயல்படாமல் இருந்து வருகிறது,மேலும் இலவச அமரர் ஊர்தி இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு துறை அமைச்சரிடம்
எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.முன்னதாக மருத்துவ துறை அமைச்சர் பெயரை மறந்தவர் கூட்டத்தில் இருந்தவர்கள் கூற அதையும் தவறாக கூறினார்.
கூடங்குளம் அணு உலை தொடர்பான ரகசிய தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.