news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேலப்பிடாகை கடைத்தெருவில் பட்டப்பகலில் தாக்குதல்
tv

Also Watch

மேலப்பிடாகை கடைத்தெருவில் பட்டப்பகலில் தாக்குதல்

மேலப்பிடாகை, நாகப்பட்டினம்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பிடாகை பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டிபன் வாங்குவதற்காக ரவிச்சந்திரன் வந்தபோது முன்விரோதம் காரணமாக இவருக்கும் வெண்மணி தரப்பினருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியது.

அப்போது சிந்தாமணி பகுதியில் உள்ள அரசு நியாய விலை கடை விற்பனையாளரான வெண்மணி மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து ரவிச்சந்திரனை இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது வெளியான காட்சிகளில், மூவர் சேர்ந்து ரவிச்சந்திரனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வெண்மணி, சிவராமன், ராஜா ஆகிய மூவர் மீது ஆயுதம் கொண்டு தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
குல்லாபாய் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

குல்லாபாய் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved