news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குல்லாபாய் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு
tv

Also Watch

tv

Read this

குல்லாபாய் உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

ஆரணி, திருவண்ணாமலை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குல்லாபாய்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாக்கு வந்த இரு வேறு குடும்பத்தினர் உணவு அருந்துவதற்காக ஆரணி வேலூர் சாலையில் உள்ள
குல்லா பாய் என்ற அசைவ உணவகத்தில் உணவு அருந்து சென்றுள்ளனர்

அந்த உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ்,சிக்கன் தந்தூரி, சிக்கன் பார்பிக்யூ, கிரில் சிக்கன், இரால் பிரியாணி போன்ற அசைவ உணவகத்தை குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பிரியதர்ஷினி முகுந்தன்(4) ரோகித் (11) மதுமிதா(13) ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தலைவலி வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதை ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.


இவர்களைத் தொடர்ந்து ஆரணி அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் குடும்பத்தினர் லட்சுமி மற்றும் அவர்களது மகன் அர்த்திக்(4)தலைவலி வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆரணியில் தொடர்ந்து அசைவ உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரணியில் 500கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவு உண்டு 4 சிறுவர்கள் உட்பட 10 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Related Link
சொட்டமுறி கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

சொட்டமுறி கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

0
19 mins agoshare
சனீஸ்வர பகவான் கோயில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau