பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இளம்பெண்ணை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்த செல்வம், கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு நடமாடும் நகைக்கடையாக வலம் வருகிறார். இந்நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு, சினிமா ரவுடிகளைப் போன்று 10-க்கும் மேற்பட்ட கார்கள் தொடர வந்த அவர், அங்கு ஒலித்த பாடலுக்கு ஏற்ப நடமாடினார். அப்போது, அருகில் ஆடிய இளம்பெண்ணை, மூட்டையை தூக்குவதுபோன்று, தனது தோளில் தூக்கிக் கொண்டு ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. Related Link கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்