புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இராக்கத்தான்பட்டியில் சுமார் 300கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் அருகே கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியால் குடிநீர் மாசுபட்டு உப்பு நீராக மாறி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரக செயல் இழப்பு மற்றும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருவதாகவும் கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அதிக வெடி சத்தம் ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு வருவதாகவும் விவசாய நிலங்களில் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்தது வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கல்குவாரியை இழுத்து மூட கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று குன்றண்டோர் கோயில் கிள்ளுக்கோட்டை சாலை இராக்கத்தான்பட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த குளத்தூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. Related Link 4 வயது மகளின் மூச்சை நிறுத்திய தந்தை