ரத்தக் காயங்களுடன் குத்துயிரும் குலையுயிருமாக கிடந்த 4 வயது சிறுமி. மகளை மார்பில் தூக்கி போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய தந்தை. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பறிபோன சிறுமியின் உயிர். சிறுமிக்கு எப்படி அடிப்பட்டது என விசாரித்த போலீஸுக்கு அதிர்ச்சி. பெற்ற தந்தையே மகளை அடித்து கொன்று விட்டு, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தது ஏன்? தந்தையின் ரத்த வெறிக்கு என்ன காரணம்? நடந்தது என்ன?உயிருக்குப் போராடிய 4 வயது சிறுமிபடிக்கட்டுல இருந்து விழுந்ததால, 4 வயசு சிறுமிக்கு ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டிட்டு இருந்துருக்கு. உயிருக்கு போராடிட்டு இருந்த மகள மார்புல தூக்கி போட்டபடி, தந்தை ஹாஸ்பிட்டலுக்கு பதறியடிச்சிட்டு ஓடிருக்காரு. சிறுமியோட உயிர காப்பாத்துறதுக்கு மருத்துவர்கள் எவ்வளவோ போராடி பாத்தாங்க. ஆனா, சிறுமியோட உயிர், ஹாஸ்பிட்டலுக்கு போன கொஞ்ச நேரத்துலேயே பறிபோய்ருச்சு.மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய தாய்அதுக்கப்புறம், ஹாஸ்பிட்டல்ல இருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் போய்ருக்கு. அடுத்த கொஞ்ச நேரத்துலேயே ஹாஸ்பிட்டலுக்கு வந்த போலீஸ், சிறுமி எப்படி கீழ விழுந்தாங்க? இது எப்போ நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க, அங்க நின்னுட்டு இருந்த சிறுமியோட அப்பாக்கிட்ட விசாரிச்சாங்க. ஆனா, அவரு போலீஸ்காரங்கக்கிட்ட மாத்தி மாத்தி பேசிருக்காரு. அந்த நேரத்துல வேலையில இருந்து பதறியடிச்சிட்டு ஓடிவந்த சிறுமியோட அம்மா, மகள் சடலத்த பாத்து கதறி அழுதுருக்காங்க. அதுமட்டுமில்லாம, சிறுமியோட உடம்புல அங்க அங்க காயங்கள் இருந்தத பாத்த தாய்க்கு, சந்தேகம் வந்துருக்குது.தந்தை கிருஷ்ணா கூறியதை கேட்டு அதிர்ச்சிஅதனால, தன் மகளோட மரணத்துல சந்தேகம் இருக்குறதா போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, சிறுமிகூட வீட்டுல இருந்த தந்தைய கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சாங்க. அப்பதான், என் மகள, கோவத்துல நானே அடிச்சு கொன்னுட்டேன்னு சொல்லி எல்லாரையும் அதிர வச்சிருக்காரு. குடும்ப வறுமையால் வேலைக்கு சென்று வந்த மனைவிஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்ல உள்ள கரந்தியா கிராமத்த சேர்ந்தவர் கிருஷ்ணா ஜெயஸ்வால். இவருக்கு ரெண்டு பிள்ளைகள். இளைய மகளுக்கு நாலு வயசு ஆகுது. கிருஷ்ணாவும், அவரோட மனைவியும் ஒரு பிரைவேட் கம்பெனில ஹெல்பர் வேலை பாத்துட்டு இருக்காங்க. பகல் நேரத்துல கிருஷ்ணாவும், இரவு நேரத்துல மனைவியும் மாறி மாறி பசங்க ரெண்டு பேரையும் கவனிச்சிட்டு இருந்துருக்காங்க. பிள்ளைகளை எந்நேரமும் படிக்க சொல்லி டார்ச்சர்ஏழ்மையான குடும்பத்த சேர்ந்த கிருஷ்ணா, நாம கஷ்ட பட்ற மாதிரி எதிர்காலத்துல நம்ம பிள்ளைகளும் கஷ்டப்பட கூடாதுன்னு அவங்களுக்கு படிப்புதான் முக்கியம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. எந்நேரம் பிள்ளைகள் கையில புத்தகத்த கொடுத்து எழுதனும், படிக்கனும்னு சொன்ன கிருஷ்ணா, அவங்கள கொஞ்ச நேரம்கூட விளையாட விடாம படிப்பு படிப்புனு சொல்லி டார்ச்சர் பண்ணிட்டே இருந்துருக்காரு. ஒரு கட்டத்துல பிள்ளைகளையும் கண்மூடித்தனமா அடிச்சு காயப்படுத்திருக்காரு.போதையில் மகளுக்கு பாடம் கற்று கொடுத்த கிருஷ்ணாசம்பவத்தனைக்கு கிருஷ்ணாவோட மனைவி வழக்கம்போல வேலைக்கு போயிட்டாங்க. தன் 2 பிள்ளைகள்கூட வீட்டுல இருந்த கிருஷ்ணா, நாலு வயசு மகளுக்கு பாடம் சொல்லி குடுத்துட்டு இருந்துருக்காரு. மது அருந்திகிட்டே பாடம் கத்துக் கொடுத்ததால, கிருஷ்ணாவ பாத்து பயந்த சிறுமி, வீட்டு பாடத்த முறையா எழுதாம இருந்துருக்காங்க.தந்தை போதையில் இருந்ததை பார்த்து சிறுமி அச்சம்அப்போ, மதுபோதையில இருந்த கிருஷ்ணா, மகள்னு கூட பாக்காம சிறுமிய கண்மூடித்தனமா தாக்கிருக்கான். அதுல, நாலு வயசு சிறுமிக்கு தலை பகுதில இருந்து பயங்கர ரத்தம் கொட்டி அங்கேயே சுருண்டு விழுந்துருக்காங்க. சில நிமிடங்களுக்கு அப்புறம்தான், ஆத்திரத்துலயும், அவசரத்துலயும் மகள கண்டமேனிக்கு அடிச்சிட்டோமேன்னு தோணிருக்கு. அதுக்கப்புறம், ரத்த வெள்ளத்துல துடிதுடிச்சுட்டு இருந்த மகள தூக்கிட்டு, பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டலுக்கு போய்ருக்காரு. ஆனா அங்க, சிகிச்சை பலனளிக்காம, சிறுமி பரிதாபமா உயிரிழந்துட்டாங்க. கிருஷ்ணாவை கைது செய்து போலீசார் விசாரணைவிசாரணையில, நடந்த எல்லாத்தையும் சொல்லி, என் மகள நான்தான் கொன்னேங்குறத கிருஷ்ணா ஒத்துக்கிட்டாரு. அதுக்கப்புறம், போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிட்டாங்க. என்னோட அப்பா, தெனமும் குடிச்சிட்டு வந்து எங்கள அடிச்சு சித்ரவதை பண்ணாவாருன்னும், தலைக்கேறுன போதையில, தங்கச்சிய அடிச்சே கொன்னுட்டாருன்னும் கிருஷ்ணாவோட 7 வயசு மகன் போலீஸ்கிட்ட சொல்லிருக்கான். அதுமட்டுமில்ல, தங்கச்சிய அடிச்சப்ப தான் எவ்வளவோ தடுக்க முயற்சி பண்ணன், ஆனா அவரு என்ன தள்ளிவிட்டுட்டு மிருகத்தனமா நடந்துக்கிட்டாருன்னு கிருஷ்ணா மேல அவரோட மகன் குற்றம் சாட்டிருக்கான். தலைக்கேறுன மதுபோதையும், ஒருநிமிஷத்துல ஏற்பட்ட ஆத்திரமும்தான் ஒரு குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிருக்கு. Related Link இரவில் மனைவியுடன் உடலுறவு, மகனுக்கு நடந்த கொடூரம்