பேச்சு மூச்சின்றி கிடந்த 2 வயது சிறுவன். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள். குழந்தையை பறிகொடுத்த வேதனையில், கதறி துடித்த தாய். அடுத்த சில நிமிடங்களிலேயே வெட்டவெளிச்சமான, தாயின் கபட நாடகம். குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய தந்தையே, குழந்தையை துடிதுடிக்க கொன்றது ஏன்.? உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்த 2 வயது குழந்தைகையில ரெண்டு வயசு ஆண் குழந்தைய தூக்கிட்டு, இளம்பெண் ஒருத்தங்க அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்காங்க. டியூட்டில இருந்த டாக்டர்களும், நர்சுகளும், குழந்தைக்கு என்னாச்சுன்னு கேட்டுருக்காங்க. அதுக்கு, பாப்பா, வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்தான், திடீர்னு வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு சொல்லி குழந்தையோட தாய் கண்ணீர் வடிச்சிருக்காங்க. உடனே பரிசோதனை பண்ணி பாத்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துருச்சுன்னு சொல்லிருக்காங்க.மகன் உயிரிழந்த செய்தியை கேட்டு கதறிய தாய்குழந்தை உயிரிழந்திருச்சுன்னு டாக்டர் சொன்னதுமே, குழந்தையோட தாய் ஹாஸ்பிட்டல்ல வச்சே கதறி அழுதுருக்காங்க. பிள்ளைய பறிகொடுத்த வேதனையில தாய் புழுவா துடிச்சத பாத்து அங்க இருந்த எல்லாரோட மனசும் சுக்குநூறா நொறுங்கிருச்சு. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான், அந்த இளம்பெண் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணது எல்லாமே நடிப்புன்னு தெரியவந்துச்சு. போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகேரள மாநிலம், திருவனந்தபுரத்த சேர்ந்த கிருஷ்ணப்பிரியாவுக்கும், ஷிஜினுக்கும் 7 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துருக்கு. இந்த தம்பதிக்கு ஒரு வயசுல ஆண் குழந்தை ஒன்னு இருந்துச்சு. ஷிஜினுக்கு நெறைய பெண்களோட பழக்கம் இருக்குறதாவும், அவரு மேல பல காவல் நிலையங்கள்ல வழக்குகளும் நிலுவையில இருக்குறதாவும் சொல்லப்படுது. மதுபோதையில மனைவி கிருஷ்ணப்பிரியாக்கூட தனிமையில இருக்கும்போதெல்லாம் ஒரு வயசு ஆண் குழந்தை அழுதுட்டே இருந்தா, குழந்தன்னு கூட பாக்காம அடிச்சு இருந்துருக்கான். மனைவியுடன் தனிமையில் இருந்தபோது அழுத குழந்தைஇந்த சூழல, சம்பவத்தனைக்கு மதுபோதையில வீட்டுக்கு வந்த ஷிஜின், மனைவி கூட தனிமையில இருந்துருக்கான். அப்போ, ஒரு வயசு குழந்தை பசிக்காக அழுதுட்டே இருக்க, தாய் கிருஷ்ணப்பிரியா மகன கவனிக்க போயிருக்காங்க. ஆனா, பாலியல் சைக்கோவான ஷிஜின் குழந்தைய கவனிக்க விடாம மனைவிய பாலியல் ரீதியா துன்புறுத்திட்டே இருந்துருக்கான். அப்போ, குழந்தையோ தொடர்ந்து அழுதுட்டே இருந்ததால, ஆத்திரமடைஞ்சவன், கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்க விடுறானான்னு பாரேன்னு சொல்லிக்கிட்டே ஒரு வயசு மகனோட வயிற்று பகுதியிலேயே ஓங்கி குத்தியிருக்கான்.மனைவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லைஅதுல, வலி தாங்க முடியாம குழந்தை இன்னும் சத்தமா அழுதுட்டே இருந்துருக்கு. குழந்தை துடிதுடிக்கிறத பாத்த தாய் மகன ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போக முயற்சி பண்ணாங்க. ஷிஜினோ அவங்கள எங்கேயும் அனுப்பாம ரூமுக்குள்ள அடைச்சு வச்சு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம மனைவிய தனிமையில இருக்கனும்னு கட்டாயப்படுத்திருக்கான். கிருஷ்ணபிரியாவும் வேற வழியில்லாம, அவன் சொன்னபடியே நடந்திருக்காங்க. அதுக்குப்பிறகு, இச்சை தீர்ந்ததும் கிருஷ்ணபிரியா மூச்சு பேச்சு இல்லாம கிடந்த மகன தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போயிருக்காங்க. அப்போ, மகன கணவர் அடிச்சதாலதான் குழந்தை இப்படி ஆகிட்டான்னு சொன்னா ஷிஜின் தன்னை உயிரோட விட மாட்டான்னு நினைச்ச கிருஷ்ண பிரியா, குழந்தை பிஸ்கட் சாப்பிட்டுட்டு இருந்ததாவும் திடீர்னு மயங்கி விழுந்துட்டதாவும் மருத்துவர்கள்கிட்ட சொல்லிருக்காங்க. ஆனா, அவங்க பேச்சுல ஒருவித தடுமாற்றத்த பாத்த மருத்துவர்களுக்கு சந்தேகம் வரவே, போலீஸுக்கு ஃபோன் பண்ணி தகவல் தெரிவிச்சுருக்காங்க.ஷிஜினை கைது செய்த போலீசார்அதுக்குப்பிறகு, அங்க வந்த போலீஸ்காரங்க கிருஷ்ணபிரியாகிட்ட கிடுக்குபிடி விசாரணை நடத்துனாங்க. அதுலதான், மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துச்சு. அதுக்கப்புறம், கிருஷ்ணபிரியா கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையா வச்சு, கணவன் ஷிஜின் மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ண காவல்துறையினர் அவன கைது செஞ்சு சிறையில தள்ளிருக்காங்க. Related Link பெண் மருத்துவருக்கு HIV ஊசியை செலுத்திய கும்பல்