பைக்கில் சென்ற பெண் மருத்துவர் மீது, மற்றொரு பைக்கை மோத விட்டு விபத்தை ஏற்படுத்திய நபர்கள். உதவி செய்வது போல நடித்து எச்ஐவி ரத்தம் நிரப்பப்பட்டிருந்த ஊசியை செலுத்தி விட்டு தப்பி ஓட்டம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். எச்ஐவி ஊசியை செலுத்திய நபர்கள் யார்? பெண் மருத்துவர் மீது எதிர் தரப்பினருக்கு அப்படி என்ன கோபம்? நடந்தது என்ன?ஸ்ராவணியின் பைக்கில் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர்கள்வேலை முடிச்சுட்டு கர்னூல் பகுதி வழியா பைக்ல போய்ட்டு இருந்தாங்க மருத்துவர் ஸ்ராவணி. அப்ப அவங்கள பின்தொடர்ந்து மற்றொரு பைக்ல வேகமாக வந்த ரெண்டு பேரு, ஸ்ராவணியோட பைக்ல மோதிருக்காங்க. இதுல நிலை தடுமாறி கீழ விழுந்த ஸ்ராவணிக்கு உடல்ல காயங்கள் ஏற்பட்டிருக்கு. அப்ப விபத்த ஏற்படுத்துன அந்த நபர்களே, ஸ்ராவணிய மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குறதுக்காக அந்த வழியா போன ஆட்டோவ தடுத்து நிறுத்தி, அதுல ஸ்ராவணிய உட்கார வச்சுருக்காங்க. அந்த நேரத்துல வசந்தரா-ங்குற பெண் மறைச்சு வச்சுருந்த ஊசிய எடுத்து ஸ்ராவணியோட கையில குத்திருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச ஸ்ராவணி நீங்க யாரு? எதுக்கு என் கையில ஊசி போட்டிங்க, அந்த ஊசியில இருந்தது யாரோட ரத்தம்ன்னு கேட்ருக்காங்க. அதுக்கு அந்த நபர்கள் ஒன்னுமே சொல்லாம அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. அதுக்கடுத்து மருத்துவமனைக்கு போன ஸ்ராவணி, சிகிச்சை எடுத்துருக்காங்க. அதுல தான் அவங்களுக்கு குத்தப்பட்டது எச்ஐவி ரத்தம் நிரப்பப்பட்டிருந்த ஊசின்னு தெரியவந்துச்சு.சிசிடிவி காட்சிகளில் பதிவான குற்றவாளிகளின் முகம்அதுக்கடுத்து தன்னோட கணவருக்கு ஃபோன் பண்ண ஸ்ராவணி நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு, போலீஸ்ல புகார் அளிச்சுருக்காங்க. இந்த சம்பவத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அந்த பகுதியில உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அப்ப வசந்தராவும், இன்னொரு நபரும் பைக்ல வந்து ஸ்ராவணிக்கு ஊசி போட்டுட்டு தப்பிச்சு போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. இந்த நிலையில அந்த பைக் நம்பர வச்சு வசந்தராவோட வீட்டு அட்ரஸ கண்டுபிடிச்ச போலீஸ், அவங்கள கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க.உயிருக்கு உயிராக காதலித்த கருணாகர் - வசந்தராஆந்திராவுல உள்ள கர்னூலை சேர்ந்த கருணாகர் டாக்டரா பணிபுரிஞ்சுட்டு இருக்காரு. கல்லூரி காலத்துல இவரும், நர்ஸா வேலை பாத்துட்டு இருக்குற வசந்தரா-ங்குற பெண்ணும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. ஆனா ரெண்டு பேரோட காதலுக்கு வீட்ல எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. அதே மாதிரி இந்த காதல் ஜோடிகிடையிலையும் அடிக்கடி பிரச்சனையாவே இருந்துருக்கு.இதனால கருணாகரும், வசந்தராவும் ரொம்ப நாட்களா பேசமா இருந்துருக்காங்க. கல்லூரி முடிஞ்சதுக்கு அப்புறம் கருணாகருக்கும் மருத்துவரா பணியாற்றிட்டு இருக்குற ஸ்ராவணிக்கும் பெற்றோர் கல்யாணம் பேசி முடிச்சுருக்காங்க. இத தெரிஞ்சு கடும் கோபமான வசந்தரா, என்னைய காதலிச்சுட்டு எதுக்கு இன்னொருத்திய திருமணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்ட, நீ என்னைய தான் கல்யாணம் பண்ணனும், என்னை தவிர்த்து வேற யாரையும் கல்யாணம் பண்ணனா உன்ன நிம்மதியா வாழ விடமாட்டேன்னு மிரட்டிருக்காங்க. அதுக்கு கருணாகர், உனக்கு எனக்கும் செட் ஆகாது, அதனால தான் நான் வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன், இனிமேல் என்ன டார்ச்சர் பண்ணாத, நீயும் ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டு அங்கருந்து கிளம்பிட்டாரு.கருணாகரை பழிவாங்க திட்டம் போட்ட வசந்தராஅடுத்த ஒரு மாசத்துலையே கருணாகருக்கும் - ஸ்ராவணிக்கும் திருமணமும் நடந்துருச்சு. இத தெரிஞ்சு கொலை வெறியான வசந்தரா, கருணாகர ஏதாவது பண்ணியே ஆகனும்னு திட்டம் போட்ருக்காங்க. இதனால தன்னோட தோழிகள கூட சேத்துக்கிட்ட வசந்தரா, வேறொரு நர்ஸ் மூலமா எச்ஐவி நோயாளியோட ரத்தத்த திருடிருக்காங்க. அடுத்து, அந்த ரத்தத்த ஒரு ஊசியில நிரப்பி வசந்தரா, அத ஸ்ராவணிக்கு போட திட்டம் போட்ருக்காங்க.வசந்தரா, ஜோதி உள்ளிட்ட நபர்கள் கைதுசம்பவத்தன்னைக்கு ஸ்ராவணி வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தாங்க. அப்ப அவங்கள பின்தொடர்ந்து வந்த வசந்தரா, ஜோதி உள்ளிட்ட நபர்கள் விபத்தை ஏற்படுத்திட்டு ஸ்ராவணியோட கையில ஊசிய குத்திட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. இப்ப ஸ்ராவணிக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு அவங்க நார்மல் கண்டிஷன்ல இருக்குறதா கூறப்படுது. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் வசந்தரா, ஜோதி உள்ளிட்ட நபர்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link மாற்று சமுதாய சிறுமியுடன் காதல்