கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது. வருகின்ற 22ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும், இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இதையும் பாருங்கள் - வெளுத்து வாங்கிய கனமழை மிரட்டும் காட்சி | Tamil Nadu rain news