நண்பர்களுடன் அமர்ந்து மதுஅருந்திக் கொண்டிருந்த இளைஞர். திபுதிபுவென ஓடி வந்து இளைஞரை கல்லால் அடித்தே கொலை செய்த இருவர். கொலையை நேரில் கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ். நீண்ட நாட்களாக இருந்த முன்பகையே கொலைக்கு காரணம் என விசாரணையில் அம்பலம். இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்தவர்கள் சிக்கினார்களா? பின்னணி என்ன?கோவையில உன்ன கெம்பட்டி காலனி பகுதிய சேந்த பிரவீன்குமாருக்கும், அதே பகுதிய சேந்த கோகுல கிருஷ்ணனுக்கும் மதுபோதையில அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுட்டே இருந்துருக்கு. 2024ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில விநாயகர் சதுர்த்தி விழா ரொம்ப கோலாகலமா நடந்துட்டு இருந்துச்சு. அப்ப தங்களோட ஏரியாவுல விநயாகர் சிலைய வைக்குறது தொடர்பா பிரவீனுக்கும், கோகுல கிருஷ்ணனுக்கும் இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் இடையில முன்பகை இருந்ததால, இந்த பிரச்னை இன்னும் தீவிரமாகிருக்கு. இந்த நேரத்துல விநாயகர் சதுர்த்திக்கான விழா ஏற்பாடுகள் பண்ணிட்டு இருந்தாரு கோகுல கிருஷ்ணன். அப்ப மதுபோதையில அங்க போன பிரவீன் மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து அவர சரமாரியா வெட்டிக் கொன்னுருக்காரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் பிரவீன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.கோகுல கிருஷ்ணன் உயிரிழந்த விஷயத்த கேள்விப்பட்ட அவரோட நண்பர்களான கண்ணன், மனோஜ் ஆகிய ரெண்டு பேரும் ரொம்ப நொந்து போய்ருக்காங்க. அடுத்து அவரோட சடலத்துக்கு முன்னாடி, நின்னு, கொலைக்கு காரணமான பிரவீன கண்டிப்பா பலிக்கு பலி வாங்கியே தீருவோம்ன்னு சபதம் எடுத்துருக்காங்க. இதுக்கிடையில கோகுல கிருஷ்ணன் கொலை வழக்குல சிறையில இருந்த பிரவீன் பெயில்ல வெளிய வந்துருக்காரு. அடுத்து சொந்த ஊர்ல இருந்தா, ஏதாவது பிரச்னை வரும்ன்னு நினைச்ச பிரவீன், நேரா பெங்களூருவுக்கு போய்ட்டு அங்குள்ள ஒரு ப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. அப்பப்ப சொந்த ஊருக்கு வர்றதும் போறதுமாவும் இருந்துருக்காரு பிரவீன். ஆனா பிரவீன் சொந்த ஊருக்கு வந்து போற விஷயம், கோகுல கிருஷ்ணனோட ஆதரவாளர்களுக்கு தெரியல. இதுக்கிடையில கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரவீன், லீவுக்காக சொந்த ஊருக்கு திரும்பி கொஞ்சம் நாட்கள் அங்கயே இருந்துருக்காரு. பிரவீன் சொந்த ஊருக்கு வந்த விஷயம் கண்ணனுக்கும், மனோஜ்க்கும் தெரிய வந்துருக்கு.இதனால பிரவீனோட நடமாட்டத்த கண்காணிக்க ஆரம்பிச்ச அந்த ரெண்டு பேரும், பிரவீன் எங்கங்க தனியா போறான், எப்பல்லாம் அவன் கூட ஆளுங்க இருக்காங்க, எப்பல்லாம் அவன் தனியா இருக்கான்னு அவனோட நடமாட்டத்த தொடர்ந்து கண்காணிச்சுட்டே இருக்காங்க. சம்பவத்தன்னைக்கு பாலாஜி நகரில் உள்ள முட்புதர்ல உட்காந்து பிரவீன் தன்னோட நண்பர்களோட சேந்து மதுக்குடிச்சுட்டு இருந்துருக்காரு. ஃபுல் போதையில தள்ளாடுனபடி இருந்துருக்காரு பிரவீன். இந்த விஷயத்த கேள்விப்பட்ட கண்ணனும், மனோஜூம் நேரா சம்பவ இடத்துக்கு போய், கையில் கிடச்ச கற்கல எடுத்து பிரவீனோட தலையில கொடூரமா அடிச்சுருக்காங்க. இதுல பிரவீன் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு. அதுக்கப்புறம் அந்த ரெண்டு பேரும் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. சம்பவஇடத்துக்கு வந்த போலீஸ் பிரவீனோட நண்பர்கள் மூலமா கண்ணன், மனோஜ் தான் கொலையாளிகள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு தலைமறைவா இருக்குற ரெண்டு பேரையும் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - பணத்திற்காக எமனாக மாறிய நண்பன்