Also Watch
Read this
By: Web Team

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, திருவேற்காடு அடுத்த பருத்திப்பட்டு தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளம் அதிகரிக்கும் என்பதால் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொது மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. திருவேற்காடு, ஆவடி, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் இந்த தடுப்பணை நிரம்பி கரை புரண்டு ஓடுகிறது. மழை தொடரும் பட்சத்தில் மேற்கொண்டு தடுப்பணையில் நீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை, பொது மக்கள் வேடிக்கை பார்த்தும் செல்கின்றனர்.