Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே சாலையை மூழ்கடித்துச் செல்லும் மழை நீரால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. ஆறு, குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், குலசேகரத்தை அடுத்த திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டூர் கோணத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்கு செல்லும் சாலையில், மழை காரணமாக சாலை முழுவதும் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. இதனால், இந்த பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள், வெளியில் சென்று வர சிரமப்படுகின்றனர்.
வாழைத் தோப்புகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து நிற்பதால், விவசாயிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மழை நீர் ஓடை அமைக்க, திற்பரப்பு பேருராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியமே இந்த அவல நிலைக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.