Also Watch
Read this
By: Manigandan Raja

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதை தடுக்க மலைச்சரிவுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதகையிலிருந்து தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் சென்று வரும் நிலையில், இச்சாலையை ஒட்டி அமைந்துள்ள வணிக நிறுவனத்தில் 90 டிகிரி
மலைச்சரிவில் உயிருக்கு ஆபத்தான முறையில் உரிய அனுமதியின்றி வடமாநில கூலி தொழிலாளர்களை பணியமத்தி டிப்பர் லாரிகளில் மூலம் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.
மேலும் இதுத்தொடர்பாக தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் மகேஷ் கனரக வாகனத்தை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கையாக வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சித்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே உரிய அனுமதியின்றி கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.