Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகளை இடித்து கட்டுவதற்காக, அங்குள்ள பழைய கடைகளை காலி செய்யும் படி நோட்டீஸ் வழங்கிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகர் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 800 கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளை இடித்து 42 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் கடந்த இரு தினங்களுக்கு முன் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved