news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பதை குறைக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பதை குறைக்க கோரிக்கை

தேனி

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Mullai periyar dam

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்து வருகின்றன இந்நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான மழை சேதங்களினால் இரண்டாம் போக நடவுப் பணிகள் பாதிப்புக்கு உள்ளானது.

தற்பொழுது இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு பெற்ற சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து முல்லை பெரியார் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதம் வரை நெல் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படும் என்பதால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை குறைந்து திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்பொழுது முல்லை பெரியாறு அணையில் 125 அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டது அணைக்கு நீர் வெறும் வெறும் 137 கன அடி தான் வந்து கொண்டு உள்ளது முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பு 3650.40 மில்லியன் கன அடி தான் உள்ளது ஆனால் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆயிரம் கன அடி வந்து கொண்டு உள்ளது.

இதனை தமிழக விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக மனு கொடுத்தும் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் தமிழக அரசுக்கு கோரிக்கை
விடுத்து வருகின்றன வர கூடிய பிப்ரவரி மார்ச் மாதங்களில் நெல் வளர்ச்சி அடைந்து பருவமடையும் பட்சத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் ஒட்டுமொத்தமாக விவசாயமே பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.

முதல் போகத்தில் பெய்த கனமழையின் காரணமாக நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது பேரிடம் மீட்பு குழு வருகை தந்து பார்வையிட்டும் சென்றனர் அதனால் இரண்டாம் போக நடவு பணி தாமதம் அடைந்து தற்பொழுது நெல் நாற்று நடந்து வரும் சூழலில் தண்ணீரை முல்லை பெரியார் அணை என்பது குறைந்து அளவு திறந்தால் மட்டுமே வரக்கூடிய நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செய்ய முடியும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Link
9 மாதங்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட நிறுவனம்

9 மாதங்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட நிறுவனம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களவையில் பிரதமர் மோடி உரை

6
14 mins agoshare
மக்களவையில் பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved