news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏப்.14க்குள் தேர்தல் - பி.எல்.சந்தோஷ்
tv

Also Watch

tv

Read this

ஏப்.14க்குள் தேர்தல் - பி.எல்.சந்தோஷ்

தியாகராய நகர், சென்னை

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறி உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 60 நாட்களே உள்ளதால், கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அவர், அறிவுரை வழங்கினார்.

பாஜக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, சென்னை கமலாலயம் அலுவலகத்தில் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருகிறது தேர்தல்
இந்தக் கூட்டத்தில் பி.எல். சந்தோஷ் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள்கள்தான் இருக்கிறது. முதல்கட்டமாகவே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட இருப்பதால் தேர்தல் களத்தில் போட்டி கடுமையாக இருக்கும்.

மூத்த நிர்வாகிகளுக்கு அறிவுரை
மூத்த நிர்வாகிகள் தங்களை மட்டும் முதன்மைப்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பாஜகவில் நியமித்த தேர்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கான தொகுதிகளில் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

அண்ணாமலை பங்கேற்கவில்லை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த, மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

Related Link
கேட்பாரற்று கிடந்த கட்டைப்பை, பளபளத்த 20 சவரன் தங்க நகைகள்

கேட்பாரற்று கிடந்த கட்டைப்பை, பளபளத்த 20 சவரன் தங்க நகைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

0
12 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved