news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
tv

Also Watch

tv

Read this

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

வேதாரண்யம், நாகப்பட்டினம்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Job mosadi

மோசடி : 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 நபர்களிடம்,சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.49 லட்சம் மோசடி செய்த நபரை நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கொரட்டூர் குச்சிபாளையம், பகுதியைச் சேர்ந்த திருமலை(32) என்பவர், வேலை விசா, விமான டிக்கெட், மருத்துவ பரிசோதனை, முகவர் கட்டணம் உள்ளிட்ட காரணங்களை கூறி, வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 நபர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.4லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலித்துள்ளார்.

இருப்பினும் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.இந்த புகாரின் அடிப்படையில்,நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த திருமலையை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அவர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Link
நெய்வேலி தனியார் அனல் மின் நிலையம் முன்பு போராட்டம்

நெய்வேலி தனியார் அனல் மின் நிலையம் முன்பு போராட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

0
0 min agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved