Also Watch
Read this
By: Manigandan Raja

கஞ்சா பறிமுதல் :
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கும் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர்
பேரூந்து நிலையம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்.
ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக மூன்று வாலிபர்கள் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பதட்டமாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் வாலிபர்கள் பதிலளித்துள்ளனர். மூன்று வாலிபர்களையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை
சோதனை செய்து பார்த்ததில் பையில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
மூன்று பேரையும் கைது செய்த அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தஞ்சாவூரை சேர்ந்த கோகுல் மற்றும் முத்துக்குமரன் வேலூரை சேர்ந்த முஸ்தபா என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய செய்தது தெரியவந்துள்ளது.மூன்று பேரையும் கைது செய்த
போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved