Also Watch
Read this
By: Web Team

போடிநாயக்கனூரில், புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு, 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி முதல் வார சனிக்கிழமையையொட்டி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தாரர்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.