Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணி மாற்றம் செய்யப்பட்டதை வாபஸ் பெற வலியுறுத்தி அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் விஜய சுந்தர் பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர் பணி மாற்றம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved