திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் 3 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 250 ஏக்கரிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வயல்வெளியில் மழைநீர் குளம்போல தேங்கியிருப்பதால் அதில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரித்துரைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி தேரோட்டம்