news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேங்கை மகன் ஒத்தையில் நிக்கறேன்...!!
tv

Also Watch

tv

Read this

வேங்கை மகன் ஒத்தையில் நிக்கறேன்...!!

கடலூர்

32

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cdl 9

வேளாண்மை துறை அமைச்சரை எதிர்கொள்ள எதிர் கட்சிகள் தயங்குவதால் வேங்கை மகன் ஒத்தையில் நிக்கறேன் மொத்தமா வாங்களே என்ற நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் பன்னீர் (செல்வம்)வாசம் வீசுமா? குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி ஓர் அலசல்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறு குறிப்பு
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 1996- ஆம் ஆண்டு திமுக சார்பில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001, 2006, மற்றும் 2016 தேர்தலில்களிலும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற இவர் 2011-ல் நடைபெற்ற குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனிடம் தோல்வியினை தழுவினார். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராகவும், பின்னர் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2021- ல் மீண்டும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்பொழுது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.


எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதில் இருந்து என்ன என்ன செய்தார்?

குறிஞ்சிப்பாடியை தாலுக்காவாக மாற்றியது

குறிஞ்சிப்பாடியில் தாலுகா மருத்துவமனை கொண்டு வந்தது

குறிஞ்சிப்பாடியில் பாலம் கட்டிக்கொடுத்தது

குறிஞ்சிப்பாடியில் புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது

வடலூரில் புதிய பேருந்து நிலையம்

வடலூரில் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனை

வடலூரில் இருபாலருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம்

என ஏராளமான திட்டங்களை அமைச்சர் கொண்டு வந்து இருப்பதாக திமுக தப்பில் கூறபடுகிறது.

மேலும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல்வேறு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

ரேஷன் கடைகள், சாலை வசதிகள், பூங்கா, புதிய மேல் நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகள் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வடலூரில் புதிய நீதிமன்றம், குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு அறுவா மூக்கு திட்டம்

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது ஏரியாக திகழும் பெருமாள் ஏரியினை தூர்வாரி பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி செய்து விவசாயிகளின் துயர் துடைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

வடலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடித்த சாலை விரிவாக்கம் செய்து மின் விளக்குகள் வசதி செய்துள்ளார்.

திருநங்கைகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கருங்குழி கிராமத்தில் தனிதனியாக வீடுகட்டி கொடுத்துள்ளார்.

இலங்கை தமிழ்களுக்கு ரெங்கநாதபும் கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளையும் கட்டிகொடுத்து இருக்கிறார்.

மேலும் வடலூரில் ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென்று இருப்பிட வசதி செய்து கொடுத்து இருக்கிறார்.


தமிழக அரசின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்துவதிலும், சட்டமன்ற நிதியில் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்ததிலும், வருவதிலும் திறம்பட செயலாற்றுவதாக பொதுமக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள கழுவடிகுப்பம் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த கிராம மக்களை வெளியேற்றி விட்டு அங்கு காலணி தொழிற்சாலை கொண்டு வர முயற்சித்தது, சிப்காட் விரிவாக்கம் பொதுமக்களின் நிலங்களை கையகபடுத்த முயற்சிப்பது, வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க முயற்சிப்பது என இவற்றை எல்லாம் குறிப்பிட்டு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக எதிர்கட்சியினரின் குற்றசாட்டாக உள்ளது.

திமுகவினர் மத்தியில் இவர் கையே ஓங்கி இருக்கிறது?
இந்த நிலையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளராக இருப்பதாலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக இருப்பதாலும், உட்கட்சி பிரச்சினை ஏதும் இன்றி இருப்பதால் திமுகவினர் மத்தியில் இவர் கையே ஓங்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

களம் இறங்க தயக்கம்
மேலும் கடந்த தேர்தலில் எம்.ஆர்.கே.வினை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வி.இராமஜெயம் கடந்த முறை போட்டியிட்டார். இதனால் இந்த முறை அவர் குறிஞ்சிப்பாடியில் களம் இறங்க தயங்குவதாக கூறப்படுகிறது.

கூட்டணிக்கு தொகுதி கைமாறுமா?
இதனிடையே தற்பொழுது அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக்கு தொகுதி கைமாறுமா என்ற குழப்பமே நிலவி வரும் நிலையில் அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் வேலைகள் நடைபெறாத வேலையில்,குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுகவினர் தேர்தல் வேலைகளை முன்புறமாக செய்து வருகின்றனர். ஆகவே குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் பன்னீரின் வாசம் வீசுமா என பொருத்திருந்து பார்ப்போம்.

Related Link
சிட்டு குருவி, சிட்டு குருவி சேதி தெரியுமா?

சிட்டு குருவி, சிட்டு குருவி சேதி தெரியுமா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 6 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved