news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிறைவடையாத மேம்பால பணி, நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

நிறைவடையாத மேம்பால பணி, நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல்

கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kkr traffic

ஒசூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாநில எல்லைப் பகுதிகளில், இரவு முழுவதும் தொடர் மழை மற்றும் நிறைவடையாத மேம்பாலப் பணிகளால், மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.

மாநில எல்லையை ஒட்டியுள்ள ஜூ ஜூ வாடி மற்றும் கர்நாடக மாநில பகுதியான அத்திப்பள்ளியில், இரவு முழுவதும் தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை நிலவுகிறது.
இந்நிலையில், ஒசூர் சிப்காட் பகுதியில், பல மாதங்களாக மேம்பாலப் பணி நடைபெற்று வரும் நிலையில், மாற்றுப்பாதைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது.


இதன் காரணமாக, கர்நாடக மாநில பகுதிகளில், தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்தும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதால், பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
26 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau