பழனி அருகே நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், பக்கத்து வீட்டில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்திரப்பட்டியில் உள்ள ராயர் சிட்பண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் செந்தில்குமார், ஐடி ரெய்டு வருவதை அறிந்துகொண்டு சில ஆவணங்களை பக்கத்து வீட்டில் வைத்துவிட்டு பூட்டியதாக தெரிகிறது.