Also Watch
Read this
By: Web Team

தொடர் கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர் வரத்து 3046 கன அடியாக கிடுகிடுவென அதிகரித்ததால், வினாடிக்கு 2050 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஒசூர், சூளகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறு, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 3046 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 52 அடிக்கு 49.70 கன அடி நீர் இருப்பு உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 2050 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.