Also Watch
Read this
By: Manigandan Raja

கடலில் விழுந்த லாரி :
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் முத்துமாரியப்பன் (36). இன்று அதிகாலை சென்னை துறையமுகத்தில் கண்டெய்னர் லோடு இறக்கிவிட்டு வெளியே சென்றார்.
ட்ரெய்லர் லாரியை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்போது ஓட்டுனர் முத்து மாரியப்பன் துறைமுகத்தின் அனுமதி இல்லாத பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் அங்கே போக கூடாது என கூச்சலிட்டனர். அப்போது டெய்லர் லாரியின் முன்பாக கேபின் உடைந்து டிரைவருடன் கடலுக்குள் லாரி விழுந்தது.
அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved