Also Watch
Read this
By: Web Team

நாமக்கல்லில் முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் அசோசியேசன் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கோவையில் இருந்து வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தனர்.
நாமக்கல், ஈரோடு, காங்கேயம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கோழிப்பண்ணை, தீவனம் தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் குறிப்பிட்ட தொகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.