Also Watch
Read this
By: Web Team

4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் போராட்டத்தை கைவிட்டார்.
தமிழகத்துக்கு வரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி கடந்த 29ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கிய சசிகாந்த் செந்தில் உடல்நலம் பாதித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று அவர் பழரசம் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved