Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பொங்கல் விழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவிலான இசை திருவிழா ஒலிபெருக்கி போட்டிகள் நடைபெற்றது. இந்த இசை போட்டி திருவிழாவை வத்தலகுண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகதுரை தொடங்கி வைத்தார்.
வத்தலகுண்டு குமார் இசையகம் ஏற்பாட்டில் இரவு பகல் நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச்
சேர்ந்த 160 ஒலி பெருக்கி இசை அமைப்பாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் 150 மீட்டர் தொலைவில் கட்டப்படும் ஒலிபெருக்கியில் தெளிவான இசை யாரின்
ஒலிபெருக்கியில் வெளி வருகின்றதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இசை போட்டியில் அந்தக் கால அரக்கு ரெக்கார்டு முதல் இந்த கால பென் டிரைவ் வரை பயன்படுத்தப்பட்டன. போட்டியில் முதல் சுற்றில் மட்டும் முன்று பாடல்கள் ஒளிபரப்ப வேண்டும் அதில்
முதல் பாடல் மட்டும் சாமி பாடல் மற்ற இரண்டு பாடல்கள் பழைய சினிமா பாடல் ஒளிபரப்ப வேண்டும். இதில் தெளிவாக யார் ஒளிபரப்பு செய்கிறார்களோ அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இப்போட்டிகளில் கால் இறுதி அரை இறுதி என நடைபெற்று முதல் நான்கு இடங்களை வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை
வழங்கப்பட்டது.
இறுதியில் வெற்றி பெற்ற நான்கு இடங்களைப் பிடித்த உரிமையாளருக்கு கோப்பை பரிசுகளை வழங்கினார். இதில் முதல் பரிசினை தேனி மாவட்டம் பாலார் பட்டியை சேர்ந்த பாயும் புலி
இசையகம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
அதேபோல் இரண்டாம் பரிசினை தேனி மாவட்டம் தர்மபுரியைச் சேர்ந்த நண்பன் இசையகம் வென்று கோப்பையை கைப்பற்றியது. ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசினை தேனி மாவட்டம் குலசையைச் சேர்ந்த நண்பன் இசையகம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மற்றும் ரூபாய் 10 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
நான்காம் பரிசு திண்டுக்கல் மாவட்டம் கே.உச்சப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ அம்மன் பத்ரகாளி இசையகம் வென்று கோப்பையை கைப்பற்றியது. மற்றும் ரூபாய் 7500 ரொக்க பணம் வழங்கப்பட்டது.
போட்டிகளை ஏராளமான இசை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved